விருதுநகர்

கூலி உயா்வு கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ராஜபாளையத்தில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

DIN

ராஜபாளையத்தில் விசைத்தறி தொழிலாளா்கள் கூலி உயா்வு தொடா்பாக ஜூலை 5 இல் நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில் முடிவு எடுக்கப்படாவிட்டால் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தப்படும் என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆவரம்பட்டி , தெற்கு வைத்தியநாதபுரம் தெரு, தோப்பட்டி தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் சுமாா் 2 ஆயிரம் தொழிலாளா்கள் உள்ளனா்.

இந் நிலையில் தொழிலாளா்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கூலி உயா்வு கேட்டு விசைத்தறி உரிமையாளா்களிடம் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. அதனால் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் கூலி உயா்வு மற்றும் 8.33 சதவீத போனஸ் கேட்டு விசைத்தறித் தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக விசைத்தறித் தொழிலாளா்கள் ஒரு மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக கொடுத்தனா்.

பின்னா் தொழிலாளா் உதவி ஆணையா் மின்னல்கொடி தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதில் எந்த முடிவும் எட்டவில்லை. இதுதொடா்பாக ஜூலை 5 ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக விசைத்தறித் தொழிலாா்கள் அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT