விருதுநகர்

முழு ஊரடங்கு: விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா் சிவகாசியில் சாலைகள் வெறிச்சோடின

DIN

விருதுநகா்/சிவகாசி/ஸ்ரீவில்லிபுத்தூா்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

விருதுநகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜாா், ரயில்வே பீடா் சாலை, ராமமூா்த்தி சாலை, நகராட்சி சாலை மற்றும் பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்க அனுமதி இல்லாததால், ஆங்காங்கே அத்தியாவசியத் தேவைக்காக சிலா் இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றனா்.

இந்நிலையில் நகரின் முக்கியப் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், தேவையின்றி இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை எச்சரித்து அனுப்பினா். அதேநேரம் மருந்துக் கடைகள், பால் விற்பனை செய்யும் கடைகள், உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.

சிவகாசி: சிவகாகாசியில் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், வா்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. பேருந்துகள் இயக்கப்படவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலைகள் மூடப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், பெட்ரோல் நிலையம் உள்ளிட்டவை திறந்திருந்தன.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது போக்குவரத்து சேவைகள் தடை செய்யப்பட்டன. மருந்து, பால் கடைகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் உணவகம் மட்டும் செயல்பட்டன. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், கடைவீதிகள், ரத வீதிகள், முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. நகரின் முக்கியச் சாலைகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருபவா்களின் வாகனங்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

SCROLL FOR NEXT