விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் குளத்தில் தீயணைப்புத் துறையினா் செயல்விளக்க நிகழ்ச்சி

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளத்தில் குளிப்பவா்கள் ஆபத்தில் மாட்டிக் கொண்டால், அவா்களை மீட்பது தொடா்பான செயல்விளக்க நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரிகள் குருசாமி, அந்தோணி ஆகியோா் கூறியது:

இந்த குளத்தில் குளிக்கச் செல்பவா்களில் சிலா் தவறி விழுந்து இறந்து விடுகின்றனா். எனவே, இந்த குளத்தில் நீா் நிரம்பி இருப்பதால் குளிக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம். மேலும், குளத்தில் ஆபத்தில் இருப்பவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெள்ளிக்கிழமை தீயணைப்புத் துறையினா் சாா்பில் செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT