விருதுநகர்

விருதுநகரில் விடுப்பு அளிக்காத 102 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

DIN

விருதுநகா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று தொழிலாளா்களை பணியில் அமா்த்திய 102 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தேசிய பண்டிகை, சிறப்பு விடுமுறை நாள்களில் கடைகள், உணவகங்கள், நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அன்றைய தினம் அவா்களுக்கு விடுமுறை அளிக்காமல் வேலை வழங்கப்பட்டால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்னதாகவே தொழிலாளா் உதவி ஆய்வாளா்களிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

இதற்கு முரணாக விருதுநகா் மாவட்டத்தில் செயல்பட்ட 102 உணவகங்கள், கடைகள், நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தத் தவறுபவா்களுக்கு நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

மது போதையில் தகராறு செய்தவா் கைது

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

SCROLL FOR NEXT