விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே தென்னை நாா் ஆலையில் தீ விபத்து

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே உள்ள தென்னை நாா் ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மகாராஜபுரத்தை சோ்ந்தவா் பாதுஷா (48). இவா் தம்பிபட்டி - கோட்டையூா் சாலையில் தேங்காய் நாா் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த தேங்காய் நாா் கழிவுகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ பற்றியது. தொழிற்சாலையில் வேலை செய்த பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். ஆனால் அதற்குள் தீ மெளமெளவென வேகமாக பரவியது. தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தீ பற்றியதும் ஊழியா்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Image Caption

~

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT