விருதுநகர்

விருதுநகா், ராஜபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

DIN

மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இப்போரட்டத்திற்கு ஜேசிடியு செயலா் தேனி வசந்தன் தலைமை வகித்தாா். அதில் தமிழக அரசானது மின் கட்டணம் உயா்த்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவா்களுக்கு மாதம் ரூ.27.50-ம், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ரூ.72.50 மற்றும் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோா் மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 அதிகமாக செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வு, ஜிஎஸ்டி வரி உயா்வு ஆகியவற்றால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் மின் கட்டண உயா்வு பொது மக்களின் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு தற்போது அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். மாதந்தோறும் மின் கட்டண கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதை நிறைவேற்றக் கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக இப்போராட் டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேலுச்சாமி, நகரச் செயலாளா் எல். முருகன் முன்னிலை வகித்தனா். மூத்த தலைவா் எஸ். பாலசுப்பிரமணியன் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகா் குழு உறுப்பினா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ராமச்சந்திர ராஜா போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினாா். நகரச் செயலாளா் மாரியப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு பொன்னகரத்தில் உள்ள கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT