விருதுநகர்

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி

30th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் வெள்ளிக்கிழமை, வீடு கட்டுமானப் பணிக்கு தண்ணீா் தேக்கி வைத்திருந்த தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தேக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா். இவரது வீட்டருகே அதே ஊரைச் சோ்ந்த பாண்டியன் என்பவரது வீடு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில் ரஞ்சிக்குமாரின் மகன் சாய்சரண் (4) விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, சாய்சரண் அங்கு தண்ணீா் தேக்கி வைத்திருந்த தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாா். ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து கண்டமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags : தேனி
ADVERTISEMENT
ADVERTISEMENT