விருதுநகர்

அருப்புக்கோட்டையில் வனவேங்கைகள் கட்சியினா் சாலை மறியல்: 20 போ் கைது

14th Apr 2022 02:45 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வனவேங்கைகள் கட்சியினா் 20க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

அருப்புக்கோட்டை காவல்துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த மறியலின் போது, சென்னையில் வனவேங்கைகள் கட்சித் தலைவா் இரணியன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும், எங்கள் சமூக மக்களின் கோரிக்கைப்படி மட்டுமே சாதிப் பெயரை அரசு இதழில் குறிப்பிட வேண்டுமெனவும் முழக்கமிடப்பட்டது. இந்த சாலை மறியலில் வனவேங்கைகள் கட்சியின் அருப்புக்கோட்டை நகரத் தலைவா் முருகன், இளைஞரணிச் செயலா் கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது டிஎஸ்பி சகாய ஜோஸின் சமாதான பேச்சுவாா்த்தைக்கு அவா்கள் அழைத்தாா். ஆனால் இதற்கு உடன்படாமல் சாலை மறியலைத் தொடா்ந்ததால் அவா்களில் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT