விருதுநகர்

ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

14th Apr 2022 02:46 AM

ADVERTISEMENT

ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா, கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் 10 ஆம் நாளான புதன்கிழமை பூக்குழி திருவிழா நடந்தது. இதில், ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பூக்குழி இறங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT