விருதுநகர்

சாத்தூரில் பலத்த மழை

9th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

சாத்தூரில் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. இந்நிலையில், சாத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான படந்தால், பெரிய கொல்லப்பட்டி, சடையம்பட்டி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக சாத்தூா் மெயின் பஜாா் பகுதி சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் தேங்கியதால், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்தனா். அதேபோல், விருதுநகரில் சுமாா் அரைமணி நேரம் தொடா் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT