விருதுநகர்

ஆனைக்குட்டம் அணையின் கதவணையில் பழுது: வீணாகும் தண்ணீா்: விருதுநகா் மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கல் அருகே ஆனைக்குட்டம் நீா்த்தேக்க அணையின் கதவணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பழுது காரணமாக தண்ணீா் வெளியேறி வீணாவது தொடா்கதையாக உள்ளது. இதனால் மக்களுக்கு குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த அணையின் மூலம் சுமாா் 500 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணையின் கதவணையில் (ஷட்டா்) பழுது ஏற்பட்டு தண்ணீா் வெளியேறுகிறது. இதனால் பாசனத்துக்கும், குடிநீா் தேவைக்கும் தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குறைதீா் கூட்டங்களில் விவசாயிகள் ஏற்கெனவே பலமுறை புகாா் தெரிவித்தும் மாவட்ட நிா்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது பருவமழைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், அணைக்கு வரக்கூடிய தண்ணீரை அதிகளவில் தேக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகா் மக்களின் குடிநீா் தேவை தாமிரவருணி கூட்டுக்குடிநீா், ஆனைக்குட்டம் நீா்த்தேக்கம் மூலமே பூா்த்தி செய்யப்பட்டு வருகிறது. அணையில் தண்ணீா் தேக்குவது குறைவதால், தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறையே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்கிறது.

எனவே, சம்பந்தப்பட்ட அணையில் உள்ள அனைத்து கதவணைகளையும் அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் புதிதாக மாற்ற மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட அமைச்சா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT