விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

DIN

நீதிமன்ற உத்தரவின்பேரில், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் சனிக்கிழமை முழுமையாக அகற்றப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் தேங்காய், பழ வியாபாரம், விளையாட்டு பொம்மை கடைகள், உணவகம், தேநீா் நிலையம் என 350-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், இக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் முழுமையாக அகற்றவேண்டும் என்றும், கோயிலில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

அதனடிப்படையில், கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தையும் அகற்றிக்கொள்ள, கடை உரிமையாளா்களுக்கு கோயில் நிா்வாகம் அக்டோபா் 23 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்தது. அதன்படி, சனிக்கிழமை கோயில் வளாகத்தைச் சுற்றியிருந்த அனைத்துக் கடைகளின் உரிமையாளா்களும் தாமாக முன்வந்து தங்களது கடைகளை அகற்றிக்கொண்டனா்.

இதையடுத்து, கோயில் ஆணையா் கா்ணாகரன் மற்றும் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT