விருதுநகர்

நூல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவத்துணி (காஸ் பேண்டேஜ்) உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நூலுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரி அதிகமாக உள்ளதாலும் பஞ்சுகளை வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதால் நூல் தட்டுப்பாடு ஏற்பட்டு நூல் விலை அதிகரித்துள்ளதாலும் பேண்டேஜ் உற்பத்தியாளா்கள், விசைத்தறி தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு 50 கிலோ 40 ஆம் நம்பா் நூல் ரூ.9 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. தற்போது அதன் விலை ரூ.13 ஆயிரம் வரை உயா்ந்துள்ளது. இதனால் பேண்டேஜ் உற்பத்தியாளா்கள் 4 நாள்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஆதரவாக

சிஐடியு சாா்பில் வியாழக்கிழமை சத்திரப்பட்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT