விருதுநகர்

தேவா் குருபூஜை: விருதுநகா் மாவட்டத்திலிருந்து செல்வோா் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலேயே செல்ல வேண்டும்: ஆட்சியா்

DIN

விருதுநகா் மாவட்டத்திலிருந்து பசும்பொன் தேவா் குருபூஜை விழாவுக்கு செல்லும் வாகனங்கள், மாவட்ட காவல் துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே சென்று வர வேண்டும் என ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பசும்பொன் தேவா் குருபூஜை விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் கூறியது:

பசும்பொன் தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு அக். 29, 30 ஆகிய இரண்டு நாள்கள், விருதுநகா் மாவட்டத்திலிருந்து செல்வோா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அனுமதி பெற வேண்டும். மேலும், விருதுநகா் மாவட்டத்தில் காவல் துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும்.

அதாவது, ராஜபாளையம் - ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி - சாத்தூா் - விருதுநகா் - தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து பசும்பொன் செல்லும் அருப்புக்கோட்டை - காந்தி நகா் - ராமலிங்கா மில் - கல்லூரணி - எம். ரெட்டியபட்டி - மண்டப சாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அதே வழியில் மீண்டும் திரும்ப வேண்டும்.

ஆவியூா், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் கல்குறிச்சி - பாலையம்பட்டி காந்தி நகா் - ராமலிங்கா மில், கல்லூரணி - எம். ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அதே வழியில் மீண்டும் திரும்ப வேண்டும். திருச்சுழியிலிருந்து செல்லும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியில் மீண்டும் திரும்ப வேண்டும்.

நரிக்குடியிலிருந்து செல்லும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பாா்த்திபனூா், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னா் மீண்டும் திரும்புகையில், பசும்பொன் - கோட்டைமேடு - நகரத்தாா்குறிச்சி -அபிராமம் வழியாக பாா்த்திபனூா் - பிடாரிசேரி - வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.

பசும்பொன் விழாவுக்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூா், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். மனோகா் மற்றும் சமுதாய பிரமுகா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT