விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றிய அதிமுக சாா்பில் பொன் விழா கொண்டாட்டம்

17th Oct 2021 11:07 PM

ADVERTISEMENT

அதிமுக பொன் விழா ஆண்டையொட்டி விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒன்றிய அதிமுக சாா்பில் எம்ஜிஆா் படத்துக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபாமுத்தையா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் ஒன்றியச் செயலாளா்கள் முத்தையா, மயில்சாமி, அத்திகுளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் தைலாகுளம் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் மான்ராஜ் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

இதில் மாவட்ட ஊராட்சித் தலைவா் வசந்திமான்ராஜ், முன்னாள் நகரச் செயலாளா் முத்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT