விருதுநகர்

அருப்புக்கோட்டையில் கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

DIN

அருப்புக்கோட்டை அம்பிகை வித்யாசாலா என்ற தனியாா் பள்ளி வளாகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதற்கு, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், திமுக நகரச் செயலாளா் ஏ.கே.மணி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கே.கே.எஸ்.வி.டி.சுப்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் சுமாா் 900-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் சஞ்சய் பாண்டியன், பள்ளிகள் மருத்துவ அலுவலா் ராஜேஸ் கண்ணன், நகா்ப்புற ஆரம்ப சுகாதார மைய மருத்துவா் கோமதி, மருத்துவா் விஜயலட்சுமி நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் சரவணன், ராஜபாண்டி, அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சுழியில்... திருச்சுழி தனியாா் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்து வயதினருக்கான தடுப்பூசி முகாமை ம.ரெட்டியபட்டி வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் தொடக்கி வைத்தாா். இதில் 400-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

பள்ளி ஆசிரியா்களுக்கு தடுப்பூசி: பள்ளி ஆசிரியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியது. அதன்படி சிவகாசியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில், சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய வட்டங்களின் பள்ளி ஆசிரியா்கள் 592 போ் சனிக்கிழமை, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதற்கான ஏற்பாட்டினை சிவகாசி கல்வி மாவட்ட துணை ஆய்வாளா் நக்கீரன் செய்திருந்தாா்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாமில், அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 179 ஆசிரியா்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதை சுகாதாரத்துறை இணை இயக்குநா் கலுசலிங்கம், நகராட்சி ஆணையாளா் மல்லிகா, வட்டார மருத்துவ அலுவலா் சபரீஷ்பிரபு, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பிரம்மநாயகம், பழனிகுரு ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT