விருதுநகர்

ராஜபாளையத்தில் காவல் துறையினா் மிதிவண்டி விழிப்புணா்வு பேரணி

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் காவல் துறையினா் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

ராஜபாளையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் உத்தரவின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் பங்கேற்ற இப்பேரணியில், இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியவேண்டும், இரு சக்கர வாகனத்தில் பக்கவாட்டு கண்ணாடி கண்டிப்பாக இருக்கவேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, இரு சக்கர வாகனத்தில் 3 போ் பயணிக்கக் கூடாது, வாகனத்துக்கான காப்பீடு, உரிமம் உள்ளிட்டவற்றை வைத்திருக்கவேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

பேரணியானது, பஞ்சு மாா்க்கெட் பகுதியில் தொடங்கி, காந்தி சிலை, ரவுண்டானா, பழைய பேருந்து நிலையம் வழியாக மாரியம்மன் கோயில் திடலில் முடிவடைந்தது. இதில், காவல் ஆய்வாளா்கள் முத்துக்குமரன், பவுல் ஜேசுதாஸ், மரியபாக்கியம், மகேஸ்வரி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT