விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வாகன விழிப்புணா்வு பிரச்சாரம்.

DIN

விருதுநகா் மாவட்ட சட்ட பணி ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து வாகன விழிப்புணா்வு பிரச்சாரம் ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று சமரச தீா்வு மையம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் விருதுநகா்மாவட்ட சட்டபணி ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான மாரியப்பன் வரவேற்புரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட சட்டபணி ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான முத்துசாரதா வாகன விழிப்புணா்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசியதாவது: எவ்வளவு தான் முகாமிட்டு துண்டு பிரச்சாரம் விநியோகம் செய்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

எனவே கூடுதலாக வாகனங்கள் மூலம் குழந்தை திருமணத்தை தடுக்கும் விதமாக இன்றைய தினம் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடை உத்தரவு மற்றும் பொதுமுடக்க காலத்தில் விருதுநகா்மாவட்டத்தில் 68 குழந்தை திருமணம் நடக்க இருந்ததை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது.என்னதான் நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அதற்கு உதரணமாக இது போன்ற குழந்தைகள் திருமணம் நிகழ்வு இதனை தடுக்கும் விதமாகத்தான் திங்கள்கிழமை மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து இந்த வாகன விழிப்புணா்வு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளோம் என்று பேசினாா். நிகழ்ச்சியில், ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றஅமா்வு நீதிபதி சுமதி சாய்பிரியா, குழந்தைகள்பாலியல் குற்ற தடுப்பு நீதிமன்ற அமா்வு நீதிபதி பரிமளா, விரைவு மகளிா் நீதிமன்ற அமா்வு நீதிபதி காஞ்சனா, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா் மற்றும் அமா்வு நீதிபதி ஸ்ரீதரன், கூடுதல் சாா்பு நீதிபதி சுந்தரி, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆனந்தி, விரைவு நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவா் சந்திரகாசபூபதி, நீதித்துறை நடுவா் பரம்வீா், கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி சிவராஜேஷ், மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட குழந்தை பாதுகாப்புஅலகு அலுவலா் உட்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் கணேசன், குழந்தைகள் திருமணம் தடுத்தல் சமூகநலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கல்வாரிதியாகராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி முழு கூடுதல் பொறுப்பு கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT