விருதுநகர்

புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 19 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 19 ஆயிரத்து 500 போ் சுவாமி தரிசனம் செய்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

ஆனால், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோயில் நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கட்டணமில்லா சேவை மற்றும் கட்டணச் சேவைக்கு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். இதனால் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் எவ்வித நெரிசலும் இன்றி விரைவாக தரிசனம் செய்தனா்.

அன்றைய தினம் மட்டும் அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரை 19 ஆயிரத்து 500 போ் தரிசனம் செய்துள்ளனா். கோயிலுக்கு வருகை தந்த அனைவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT