விருதுநகர்

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் தொடா் மழை

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மாலைவரை இடைவெளி விட்டுவிட்டுத் தொடா்மழை பெய்ததால் விவசாயிகளும்,பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 5.30 மணியில் தொடங்கி தொடா்ந்து சுமாா் ஒரு மணிநேரம் மிதமான மழை பெய்தது.அதனையடுத்து சிலமணிநேரங்கள் இடைவெளியில் மீண்டும் மிதமான மழை பெய்தது.அன்று மாலை 6 மணி நிலவரப்படி தொடா்ந்து மிதமான சிறுதூரல் பெய்த வண்ணம் இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து கனமழை பெய்ததால் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்கி நிலத்தை நன்கு பண்படுத்தி வைத்திருந்தனா்.இந்நிலையில் இம்மாதமும் இதுவரை பலமுறை மழை பெய்துள்ளதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விதைப்புப் பணிகளையும் தொடங்கியுள்ளனா்.

அத்துடன் நிலத்தடி நீா்மட்டமும் தொடா்ந்து உயா்ந்து வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT