விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் பனை மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா், செப். 18: ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் முழுவதும் நகராட்சி சாா்பில் முக்கிய இடங்களில் பனை மரக்கன்றுகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் (பொ) ரமேஷ் கூறியது:

நகரின் பல்வேறு இடங்களில் பனை மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்து, சேலத்திலிருந்து 600 பனை மரக் கன்றுகள் வாங்கி வரப்பட்டுள்ளன. அதை வைத்து முதல் கட்டமாக நகராட்சி அலுவலக வளாகத்தில் 100 இடங்களில் பனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கோட்டைப்பட்டி குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் 100 மரக்கன்றுகளும், செண்பகத்தோப்பு பகுதியில் 200 மரக்கன்றுகளும், மீதமுள்ள 200 பனை மரக்கன்றுகளை நகரின் பல்வேறு இடங்களில் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT