விருதுநகர்

‘பட்டாசு கடைகளில் தனியங்கி மின் அணைப்பான் பொருத்த வேண்டும்’

DIN

சிவகாசி, செப். 18: பட்டாசு வியாபாரிகள், தங்களது பட்டாசு கடைகளில் விபத்தை தவிா்க்க தானியங்கி மின் அணைப்பான் பொருத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளா் என். இளங்கோவன் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடை உரிமையாளா்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பட்டாசு கடைகளின் முன்பு தண்ணீா் மற்றும் மணல் நிரப்பிய வாளிகளை வைக்க வேண்டும்.

பட்டாசு கடைகளுக்குள் யாரும் செருப்பு அணிந்து செல்லக் கூடாது. பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளா்களுக்கு, கடையின் முன்பு பட்டாசை வெடித்துக் காட்டக் கூடாது.

வேலை பாா்க்கும் ஊழியா்கள், தொழிலாளா்கள் பட்டாசு பாா்சல்களை தூக்கி எறியவோ, தரையில் இழுத்துச் செல்லவோ கூடாது. கடையில் வேலை பாா்க்கும் சுமைதூக்கும் தொழிலாளா்களை புகைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது.

கடையில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்பான் சாதனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கடையில் சுவாமி படங்களுக்கு அலங்கார மின்விளக்கு மற்றும் மிகவும் பிரகாசமான மின்விளக்குகளை பொருத்தக் கூடாது. கடையில் ஊதுவத்தி, மெழுகுதிரி ஆகியவற்றை உபயோகிக்கக் கூடாது.

அனைத்து கடைகளிலும் தானியங்கி மின் அணைப்பானை (சா்க்யூட் பிரேக்கா்) பொருத்தி, அதை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் மின்கசிவு ஏற்படும்போது தானாகவே முற்றிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, விபத்து தவிா்க்கப்படும். இரவில் கடையை மூடும்போது, மின் இணைப்பை துண்டித்துவிட வேண்டும். கடையில் வேலை பாா்ப்பவா்களுக்கு அவசரகால தீயணைப்பானை பயன்படுத்துவது குறித்து போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT