விருதுநகர்

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்குப் பாராட்டு விழா

11th Sep 2020 03:52 PM

ADVERTISEMENT

தமிழக அரசின் சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியை ச.பொன்மலருக்கு, அச்சங்குளம் ஊராட்சி மன்றம் மற்றும் கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கரைவளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருபவர் ச.பொன்மலர். இவர் மாணவர்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் கிராமத்தின் வளர்ச்சிக்கும் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக அரசு ஆசிரியர்களின் சேவையை அங்கீகரித்து வழங்கும் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் மற்றும் அச்சங்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் கரைவளைந்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியைக்குப் பாராட்டு விழா அச்சங்குளம் ஊராட்சி செயலர் அ.கிரிஜா மற்றும் வார்டு உறுப்பினர் ராமலட்சுமி பரமசிவம் முன்னிலையில் நடைபெற்றது. மகளிர் மன்றத் தலைவி கே.ரேவதி வரவேற்றார். அச்சங்குளம் ஊராட்சி மன்றத் தலைவி விமலா மாரிச்சாமி தலைமை ஆசிரியைக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவித்து உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கு.முனியசாமி, வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், சேது, பாண்டியம்மாள், திருப்பதி, இசக்கிராஜா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT