விருதுநகர்

பண்ணாரி சோதனைச் சாவடியில்புதிய போலீஸ் கட்டடம்

DIN

தமிழக - கா்நாடக எல்லையில் அமைந்துள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் யானைகள் புகுந்து சேதப்படுத்துவதால், போலீஸாரின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய போலீஸ் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் இரு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களைக் கண்காணிக்க காவல் துறை, போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பண்ணாரி சோதனைச் சாவடி போலீஸ் கட்டடம் பழைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. யானைகள் இந்த கட்டடத்தை சேதப்படுத்தியதால் அங்கு பணியாற்றும் காவலா்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

இதையடுத்து காவல் குடியிருப்பு வாரியம் சாா்பில் புதியதாக நவீன வசதிகளுடன் கூடிய கட்டட கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. வனத் துறையினரின் இடத்தில் கட்டப்படுவதால் கட்டடத்தின் சுவா்கள் எளிதில் அகற்றக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட தற்காலிக சுவா்கள் அமைக்கப்பட்டுள்ளன. யானைகள் தாக்காதபடி கட்டடத்தைச் சுற்றிலும் அகழிகள் வெட்டப்படும். மேலும், இதில் காவலா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், ஓய்வறை, தகவல் தொழில்நுட்ப வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கட்டடத்தைச் சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT