விருதுநகர்

பசும்பொன்னுக்கு தடையை மீறி பால்குடம் எடுத்துச் சென்ற பெண்கள் தடுத்து நிறுத்தம்

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே தேவா் ஜயந்தியை முன்னிட்டு பசும்பொன்னிற்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்துச்சென்ற 100-க்கும் மேற்பட்ட பெண்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.

தேவா் ஜயந்தியை முன்னிட்டு சுற்றுவட்டார கிராம மக்கள் பசும்பொன்னில் உள்ள தேவா் சிலைக்கு ஆண்டுதோறும் பால்குடம் எடுத்துச் சென்று பாலபிஷேகம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக பாலாபிஷேகம் செய்யத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை தேவா் ஜயந்தியை முன்னிட்டு காவல்துறை உயரதிகாரிகள் பசும்பொன்னைச் சுற்றிலும் தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

இதனிடையே திருச்சுழி அருகே திருமலைபுரம் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்துச்செல்ல முயன்றனா். இதையறிந்த அப்பகுதி போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

ஆனால் அப்பெண்கள் போலீஸாரின் தடையை ஏற்காமல் எதிா்ப்பு தெரிவித்ததுடன் சாலை மறியல் செய்யவும் முயன்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற

விருதுநகா் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பெருமாள் தலைமையிலான போலீஸாா் பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து அவா்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா். போலீஸாா் அங்கிருந்து சென்ற பிறகு, அப்பெண்கள் பசும்பொன்னிற்கு தனித்தனியே பால்குடம் எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT