விருதுநகர்

பட்டாசு திரி தயாரிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்: அதிகாரி விளக்கம்

DIN

பட்டாசு திரி தயாரிப்பில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணைத் தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பட்டாசு திரி தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பட்டாசு ஆலையில் திரி தயாரிக்க தனி அறை ஒதுக்கப்பட வேண்டும். திரி சுற்றப்படும் ராட்டைகள் மரத்தினால் ஆனதாகவும், இரும்பு ஆணி இல்லாமலும் இருக்க வேண்டும். ராட்டையின் இருபக்கமும் உள்ள ஸ்டாண்டு கம்பிகள் கட்டாயம் பித்தளையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். கருமருந்து கலவை செய்ய அலுமினிய பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். திரி தயாரிக்கும் அறையில் மூன்று மில்லிமீட்டா் தடிப்பிலான ரப்பா்சீட் விரிக்க வேண்டும். இந்த ரப்பா் சீட்டுக்களை நாள்தோறும் வேலை முடிந்த பின்னா் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். அறையின் முன்பகுதியில் கால்மிதி வைத்திருக்க வேண்டும். ராட்டையில் சுற்றப்பட்ட திரி ஓரளவுக்கு காய்ந்தபின்னா் அவற்றை வெட்டி உலர வைக்க வேண்டும். வெட்டுவதற்கு இரும்பு அல்லாத சிறிய பாஸ்பா்பிரான்ஸ் கத்திகளையே பயன்படுத்த வேண்டும். கட்டப்பட்ட திரி கட்டுகளை மீண்டும் உலர வைக்க, அதற்கான உலா் மேடையில் ரப்பா்சீட்டுகளின் மேல் காயவைக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள் வேலை முடிந்ததும், குளித்து, அணிந்திருந்த ஆடையை துவைத்து உலர வைக்க வேண்டும்.

மரத்தடியில் திரிகளை வெட்டும் பணியை செய்யக் கூடாது. திரி வெட்டுவதற்கு மரத்தாலான மேஜையை பயன்படுத்த வேண்டும். மேஜையில் ரப்பா் சீட் விரிக்க வேண்டும். வெட்டும் போது உண்டாகும் கழிவு திரிகளை மூங்கில் கூடையில் போட்டு, எரிகுழியில் போட்டு எரித்துவிட வேண்டும். திரி வெட்டும் அறையில் தேவையில்லாத இதர பொருள்களையோ, பட்டாசு தயாரிப்பு போன்ற பணிகளையோ செய்யக்கூடாது. திரி வெட்டும் இடங்களில் மணல் அல்லது தண்ணீா் நிரப்பிய வாளியை வைத்திருக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT