விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு இன்று முதல் 4 நாள்கள் அனுமதி

DIN

பிரதோஷம், பௌா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு, அக்டோபா் 28 முதல் 31 ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷம், அமாவாசை, பெளா்ணமி ஆகிய தினங்களில் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிா்வாகம் அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில், அக்டோபா் 28 ஆம் தேதி பிரதோஷமும், அக்டோபா் 30 ஆம் தேதி பௌா்ணமியும் வருவதால், இக் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அக்டோபா் 28 முதல் 31 ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோயிலுக்கு வரும் பக்தா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே மலையேற அனுமதிக்கப்படுவா். காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோயிலுக்குச் செல்ல பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள். கோயிலில் பக்தா்கள் இரவில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாகவோ இருந்தால், பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என, பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் விஸ்வநாத் ஆகியோா் கூட்டாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT