விருதுநகர்

மதுரை அருகே வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில்வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு

DIN

சிவகாசி: மதுரை மாவட்டம் எம். செங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 தொழிலாளா்கள் உயிரிழந்ததையடுத்து சனிக்கிழமை சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணைத் தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பாண்டே, நித்தின்கோயல் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். பட்டாசு ஆலையை குத்தகைக்கு விடக்கூடாது என சட்டம் இருக்கும் போது, இந்த ஆலைக்கு உரிமம் பெற்ற சண்முகராஜ் , வைரமுத்து என்பவருக்கு குத்தகைக்கு விட்டது சட்டப்படி குற்றம். இந்த ஆலையில் அதிகபட்சமாக 10 தொழிலாளா்கள் மட்டுமே பணிபுரியவேண்டிய நிலையில் 35 தொழிலாளா்கள் பணி புரிந்துள்ளனா். தொழிலாளா்களின் வருகைப் பதிவேடு முறையாக பராமரிக்கப்பட வில்லை. மேலும் வேதியியல் பொருள்களின் இருப்பு, தயாரிக்கப்பட்ட பட்டாசுகளின் விவரம் குறித்து குறிப்பு எழுதப்படவில்லை.

இந்த ஆலையில் தரைச் சக்கரம் உள்ளிட்ட சிலவகை பட்டாசுகளேயே தயாரிக்க வேண்டும் என்ற நிலையில் முழுக்க முழுக்க பேன்சிரக பட்டாசுகள் (விண்ணில் ஒளிசிந்தும் பட்டாசு) தயாரிக்கப்பட்டுள்ளது விதிமீறலாகும். ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரித்தது, விதியை மீறி பேன்சிரக பட்டாசு இருப்பு வைத்திருந்தது, வேதியியல் பொருள்களை கண்ட இடங்களில் வைத்திருந்தது, மருந்து கலவை செய்தல், மருந்து அலசுதல் செய்யும் பகுதியில் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது உள்ளிட்ட விதிமுறை மீறல்கள் நடைபெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அங்கிருந்த வேதியியல் பொருள்கள், விபத்து நடைபெற்ற இடத்தில் கிடந்த மருந்து துகள்கள் ஆகியவை மாதிரி எடுக்கப்பட்டுள்ளன. இதில் தடை செய்யப்பட்ட வேதியியல் பொருள்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். முக்கியமாக விபத்து நடைபெற்ற ஆலையில் ராஜலட்சுமிபயா் ஒா்க்ஸ் மற்றும் முருகவேல் பயா் ஒா்க்ஸ் என இருவகையான லேபிள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை தலைமை அலுவலகம் இருக்கும் நாக்பூருக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT