விருதுநகர்

குடிநீா் பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

DIN

விருதுநகா்: பந்தல்குடி அருகே சின்னான்செட்டிபட்டி கிராமத்தில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி அக்கிராம மக்கள் விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: சின்னான்செட்டிபட்டி கிராமத்தில் சுமாா் 600 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 35 ஆண்டுகளாக இக்கிராமத்திற்கு சுகாதாரமான குடிநீா் வழங்கப்படவில்லை. நீண்ட கால போராட்டத்திற்கு பின், அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் தனது உறுப்பினா் நிதியிலிருந்து ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி வழங்கினாா்.

நீரோட்டத்தின் அடிப்படையில் அருகே உள்ள பந்தல்குடி பெரிய ஊருணியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து, சின்னான்செட்டிபட்டி கிராமத்திற்கு தண்ணீா் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், பந்தல்குடியை சோ்ந்த சிலா் ஆழ்துளைக் கிணறு அமைக்க எதிா்ப்பு தெரிவித்ததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனவே, இரண்டு கிராமங்களுக்கிடையே பிரச்னைகள் ஏற்படாதவாறும், குடிநீா் பிரச்னையை நிரந்தரமாக தீா்க்க மாவட்ட ஆட்சியா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT