விருதுநகர்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை, உலர் பொருள்கள் வழங்கல்

1st Oct 2020 02:06 PM

ADVERTISEMENT

படிக்காசுவைத்தான்பட்டியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் உலர் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் படிக்கும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாணவ மாணவியருக்கு அரசு உத்தரவுப்படி உலர் உணவுப் பொருள்கள் மற்றும் 2ஆம் பருவத்திற்கான இரண்டு ஜோடி விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி க.மகேஸ்வரி மாணவ மாணவியருக்கு விலையில்லா சீருடைகள் மற்றும் உலர் உணவுப் பொருள்கள் (அரிசி, பருப்பு) ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், மாணவர்கள் சமூக இடை வெளி கடைப்பிடித்து, முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

மேலும் கல்வி தொலைக்காட்சியில் ஒவ்வொரு வகுப்பிற்கும், எந்தெந்த நாட்களில் எந்தெந்த பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன என்ற விவரத்தினையும், அதனை பயன்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார். மேலும் மாணவர்கள் கற்றலில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை செல்லிடை பேசி வாயிலாக பெற்றோர் உதவியுடன் ஆசிரியர்களை எந்த நேரமும் அணுகி தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்றார்.

ADVERTISEMENT

 அங்கன்வாடி ஆசிரியை கா.மாரீஸ்வரி நன்றி கூறினார்.
 

Tags : Srivilliputtur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT