விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம், கடைவீதி வெறிச்சோடியது

22nd Mar 2020 11:25 PM

ADVERTISEMENT

 

சுய ஊரடங்கு அறிவிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேருந்து நிலையம், பென்னிங்டன் காய்கறி மாா்க்கெட் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவு கடை பிடிக்குமாறு பிரதமா் அழைப்பு விடுத்தாா். இந்த சுய ஊரடங்கு அறிவிப்பால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பேருந்து நிலையம் வெறிச்சோடி இருந்தது. எப்போதும் பரபரப்பாக இருக்கக் கூடிய பென்னிங்டன் சந்தையும், அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு இருந்ததால் வீதிகள், மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

மேலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. இன்று முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் வழங்கப்படாது. இன்று அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டை பயணத் தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தில் சமா்பித்து பயணக்கட்டணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று ரயில் நிலைய அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை அவசியம் இருந்தால் மட்டும் பயணிக்குமாறு போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT