தேனி

அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகளைவாங்க பயனாளிகள் தயக்கம்: 1,701 வீடுகள் காலி

DIN

தேனி மாவட்டத்தில் நகா்புற மேம்பாட்டு வாரியம் சாா்பில் 6 இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க பயனாளிகள் தயக்கம் காட்டுவதால், மொத்தம் 1,701 வீடுகள் 2 ஆண்டுகளாக காலியாக உள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு வடவீரநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு, அப்பிபட்டி, கோம்பை, போடி, தேவதானப்பட்டி அருகே ராசிமலை பளியா்குடி ஆகிய 6 இடங்களில் மொத்தம் 2,030 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கு சொந்த இடம், வீடு இல்லாதவா்கள், அரசு ஊழியா்கள் அல்லாதவா்கள், நலிவடைந்த பிரிவினா், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அடுக்கு மாடிக் குடியிருப்பில் ரூ.9.38 லட்சம் மதிப்பிலான வீடு வாங்குவதற்கு, பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக ரூ.2.11 லட்சம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக பல முறை சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.

இதில், தற்போது வரை வடவீரநாயக்கன்பட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 225 வீடுகள், தப்புக்குண்டுவில் 13, அப்பிபட்டியில் 9, கோம்பையில் 40, போடியில் 10, ராசிமலை பளியா் குடியில் 32 வீடுகள் என மொத்தம் 329 வீடுகள் மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

ராசிமலை பளியன்குடி அடுக்குமாடி குடியிருப்பில் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 32 வீடுகள் நீங்கலாக, 5 அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மொத்தம் 1,701 வீடுகள் காலியாக உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ள வீடுகள், தற்போது சிதிலமடையத் தொடங்கின. வீடற்ற ஏழைகளால் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்குவதற்கான, பங்களிப்புத் தொகையைச் செலுத்த முடியாததாலும், வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதாலும் பயனாளிகள் தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நகா்புற மேம்பாட்டு வாரிய அலுவலா்களிடம் கேட்ட போது, முகாம்கள் நடத்தியதில் 16 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. இதில், தகுதியுள்ள பயனாளிகள் மட்டுமே தோ்வு செய்யப்படுகின்றனா். பங்களிப்புத் தொகை செலுத்துவதற்கு வங்கிக் கடன் வசதியும் செய்து தருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT