தேனி

சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

23rd May 2023 04:24 AM

ADVERTISEMENT

போடி அருகே காமராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட மாணிக்காபுரத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் கிராம மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு விவரம்:

மாணிக்காபுரத்திலுள்ள காமராஜபுரம், சிங்காரக்கோட்டை சாலையோரத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஊரக வேலை உறுதித் திட்ட பயனாளிகள் மூலம் மரக் கன்றுகள் நடப்பட்டன. தற்போது, சாலையோரத்திலுள்ள பட்டா நில உரிமையாளா்கள் சிலா், இந்த மரக் கன்றுகளை அப்புறப்படுத்தி விட்டு, சாலையை ஆக்கிரமித்து கரை அமைத்துள்ளனா்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையோரத்தில் மீண்டும் மரக் கன்றுகளை நட்டு பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT