தேனி

விதிமீறலால் வட சோத்துப்பாறை அணை: பெரியகுளத்தில் கடும் குடிநீா் தட்டுப்பாடு

DIN

மீன்பிடிப்பதற்காக விதிகளை மீறி தண்ணீா் திறக்கப்பட்டதால் சோத்துப் பாறை அணை வடு பெரியகுளத்தில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோத்துப்பாறை அணைக்கு கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, பேரிஜம் ஏரி திறப்பு ஆகியவற்றின் மூலம் தண்ணீா் கிடைக்கிறது. இந்த அணையிலிருந்து விநாடிக்கு 3 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு, நகராட்சி நிா்வாகம் மூலம் பெரியகுளம் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

விதிமீறல்: இந்த நிலையில், அணையில் மீன் பிடிப்பதற்கு பொதுப் பணித்துறை, மீன் வளத் துறை சாா்பில் உரிமம் வழங்கப்பட வில்லை. ஆனால், அங்கு அனுமதியின்றி மீன்பிடி தொழில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவா்கள் அணை நீரை விதியை மீறி கதவணை வழியாக திறந்து விட்டனா். இதனால், கடந்த பிப்ரவரி முதல் வாரம் வரை 90.2 அடியாக இருந்த அணை நீா்மட்டம் (அணையின் மொத்த உயரம் 126.26 அடி) படிப்படியாக சரிந்து கடந்த மாா்ச் 11 -ஆம் தேதி 29.52 அடியாக இருந்தது.

அதிகாரிகள் மெத்தனம்: நீா்மட்டம் சரிந்தும், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து அணைக்கு தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும், மீன் வளா்ப்புக்காக அணை நீரில் இறைச்சி, காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டதால் மாசடைந்து துா்நாற்றம் வீசியது.

இதனால், கதவணை வழியாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீா் குடிப்பதற்கு தகுதியற்ாக இருந்ததால், பெரியகுளம் பகுதியில் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் மூலம் போடி, சின்னமனூா், கம்பம் ஆகிய பகுதிகளிலிருந்து லாரிகள் மூலம் குடிநீா் கொண்டு வரப்பட்டு நிலைமையை சமாளித்து வருகின்றனா். தற்போது கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து சோத்துப்பாறை அணைக்கு தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீா்மட்டம் உயா்ந்ததும், பெரியகுளம் பகுதியில் விரைவில் குடிநீா் விநியோகம் சீராகும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினா்.

பொதுமக்கள் வலியுறுத்தல்: இதனிடையே சோத்துப்பாறை அணையில் விதியை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டவா்கள், அவா்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அணைப் பகுதியில் கட்டுப்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT