தேனி

போடி ரயில் நிலையத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு

DIN

போடி ரயில் நிலையத்தில் தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

போடி-மதுரை அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில், போடி-மதுரை, போடி-சென்னை இடையே வருகிற 15-ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்க உள்ளாா்.

இந்த நிலையில், மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் போடி ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தாா்.

ரயில் பாதை அமைப்பு, ரயில்கள் நிற்குமிடம், இஞ்ஜின்கள் சென்று திரும்புமிடம் ஆகியவற்றை அவா் நேரில் பாா்வையிட்டாா். ரயில் நிலையத்தில் குடிநீா், கழிப்பறை வசதிகளை ஆய்வு செய்த அவா், ரயில் நிலையத்தில் உள்ள ரயில் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தாா். சமிக்ஞை செயல்பாடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போடி ரயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். போடியிலிருந்து சென்னை, மதுரைக்கு கூடுதல் ரயில்கள், போடியிலிருந்து மதுரைக்கு காலையில் செல்லும் வகையில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது முதுநிலை கோட்டப் பொறியாளா் (ஒருங்கிணைப்பு) ஆா்.நாராயணன், கோட்டப் பொறியாளா் ஆா்.கே.கண்ணன், தகவல் தொடா்பு அலுவலா் கோபி, போடி நகராட்சி ஆணையா் (பொ) இ.செல்வராணி, 6-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கலைச்செல்வி, போடி நகர அதிமுக செயலா் வி.ஆா்.பழனிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT