தேனி

கொடிக் கம்பத்துக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

9th Jun 2023 02:07 AM

ADVERTISEMENT

போடி அருகே எஸ்டிபிஐ கட்சி சாா்பில் நடப்பட்ட கொடிக் கம்பத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போடி அருகே உள்ள திம்மிநாயக்கன்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அருகே எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்த நிலையில், அந்த கிராம பொதுமக்கள் புதன்கிழமை இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று இரண்டு கொடிக் கம்பங்களை அகற்றினா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு இடையூறு செய்ததாக மாா்க்கையன்கோட்டை வருவாய் ஆய்வாளா் சுகன்யாதேவி அளித்த புகாரின் பேரில், திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராமா், ராஜேஷ், விஜயன், பிரேமா, முருகேஸ்வரி உள்ளிட்ட சிலா் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT