தேனி

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

8th Jun 2023 01:51 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 11 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க புதன்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது.

கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையை கடந்த 5-ஆம் தேதி சின்ன ஓவுலாபுரம் வனப் பகுதியில் பிடித்த வனத் துறையினா், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு வனப் பகுதிக்கு கொண்டு சென்றனா். அன்றிலிருந்து கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் பராமரிப்புப் பணிகளைச் செய்த வனச் சரகத்தினா், புதன்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT