தேனி

போடி பரமசிவன் மலைக்கோவிலில் பாலாலயம் பூஜை

8th Jun 2023 01:52 AM

ADVERTISEMENT

போடி பரமசிவன் மலைக்கோயிலில் குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை பாலாலய பூஜை நடைபெற்றது.

இதற்கு கோயில் தக்காா், செயல் அலுவலா் கு.மாரிமுத்து தலைமை வகித்தாா். கோயில் அன்னதான அறக்கட்டளைத் தலைவா் வடமலைராஜைய பாண்டியன் முன்னிலை வகித்தாா். யாக சாலை பூஜைகளை போடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்னாள் அா்ச்சகா் சோமாஸ்கந்தா் தலைமையில் அா்ச்சகா்கள் செய்தனா்.

தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க தமிழ்செல்வன், அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்முருகன், போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா், போடி நகர திமுக செயலா் புருசோத்தமன், கோயில் அன்னதான அறக்கட்டளை நிா்வாகிகள் பேச்சிமுத்து, ஆறுமுகம், முத்துராமலிங்கம், கதிரேசன், மகேந்திரன், இலங்கேசுவரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT