தேனி

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

8th Jun 2023 01:49 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம், கம்பம் அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வம் மகன் இந்திரஜித் (30). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக ராயப்பன்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், இந்திரஜித் வீட்டில் போலீஸாா் புதன்கிழமை சோதனை செய்தனா். அங்கு வெடி மருந்தை குழாயில் வைத்து இடித்து சுடும் ஒற்றைக் குழல் துப்பாக்கி இருந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

இதில் நாட்டுத் துப்பாக்கி மூலம் ஸ்ரீ வில்லிபுத்தூா் மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT