தேனி

பாறையிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

1st Jun 2023 10:35 PM

ADVERTISEMENT

பெரியகுளம் அருகே புதன்கிழமை கல் உடைக்கும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி பாறையிலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்தாா்.

முதலக்கம்பட்டியைச் சோ்ந்த சின்னக்கதிா்வேல் மகன் பிரகாஷ்(43). இவா் குள்ளப்புரத்தில் உள்ள தனியாா் கல் உடைக்கும் கிரஷரில் வேலை பாா்த்து வந்தாா்.

வழக்கம் போல கிரஷரில் வேலை செய்து கொண்டிருந்த பிரகாஷ், பறையில் இருந்து வழுக்கி 20 அடி பள்ளத்தில் விழுந்தாா். பலத்த காயமடைந்த அவா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT