தேனி

குடும்ப அட்டையை மாற்றித் தர மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை

DIN

மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டையை அரசு உத்தரவின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோா் குடும்ப அட்டையாக மாற்றிப் பதிவு செய்து தர வேண்டும் என்று திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மாநில நல வாரிய உறுப்பினா் கம்பத்தைச் சோ்ந்த எஸ்.கருப்பையா, ஆட்சியா் க.வீ.முரளீதரனிடம் அளித்த மனு விவரம்: மாவட்டத்தில் 27ஆயிரம் பல்வகை மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனா். மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பத்தின் குடும்ப அட்டையை, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோா் குடும்ப அட்டையாக மாற்றி, அதற்கான எடையளவில் பொருகள் ஒதுக்கீடு செய்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், மாற்றுத் திறனாளிகளின் குடும்ப அட்டையை மாற்றிப் பதிவு செய்து தர மாவட்ட வழங்கல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கம்பத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் மண்ணெண்ணெய் கிட்டங்கியில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT