தேனி

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தேனி மாவட்டத்தில் காலியாகவுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பணியிடத்தை நிரப்பக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மாநில நல வாரிய உறுப்பினா் கருப்பையா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களுக்கும் மேல் காலியாக உள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகமுடியாத இடத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரிய வீடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். உழவா் சந்தைகளில் கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள் சிறப்புப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள், பயிற்சியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT