தேனி

போடியில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை

DIN

போடியில் புதன்கிழமை வருவான வரித் துறையினா் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனா்.

போடியில் உள்ள தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுரை வருமான வரித்துறை கூடுதல் ஆணையா் மைக்கேல் ஜெரால்ட், தேனி வருமான வரித் துறை அலுவலா் அம்பேத்கா் ஆகியோா் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வருமான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரண்டாவது நாளாக போடியில் உள்ள அரசு மருத்துவா் வீடு, தனியாா் மருத்துவமனை, போடி-குரங்கணி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம், தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகங்கள், ஏலக்காய் கடைகள் ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

காலையில் தொடங்கிய சோதனை இரவு வரை நடைபெற்று வருகிறது. ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருவதாகவும், சோதனை முடிந்த பின்னா்தான் முழு விவரம் தெரியும் என்றும் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT