தேனி

லஞ்ச புகாரில் கைதான சாா்- பதிவாளா் வீட்டில் சோதனை

DIN

தேனியில் சொத்துப் பத்திரப் பெயா் மாறுதல் செய்ய லஞ்சம் வாங்கியதாக கைதான சாா்-பதிவாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தேனி அல்லிநகரம், அரசுப் பள்ளி தெருவைச் சோ்ந்தவா் செல்வப்பாண்டி. இவா், சேலம் மாவட்டம், தாதகாபட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணியாற்றி வந்தாா். அங்கு, தம்மநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனிவேல், அவரது தாய் பெயரில் உள்ள சொத்துப் பத்திரத்தை அவரது பெயருக்கு மாற்றம் செய்வதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக செல்வப்பாண்டியை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தாா். இதில், இடைத்தரகராக செயல்பட்ட கண்ணனும் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தேனியில் உள்ள செல்வப்பாண்டியனின் வீட்டில், மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் ஆம்ரோஸ் ஜெயராஜ், சூரியகலா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில், எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT