தேனி

ஒடிசா கஞ்சா வியாபாரி கைது

DIN

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

ஆண்டிபட்டி காவல் துறை சோதனைச் சாவடியில் கடந்த ஜன. 16- ஆம் தேதி லாரியில் கருவாட்டுக் கூடைகளுக்கு இடையே பதுக்கி வைத்து கடத்தி வந்த 1,200 கிலோ கஞ்சாவை தனிப் படை பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் தனிப் படை போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், கஞ்சா கடத்தல் குறித்து தனிப் படை போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தினா். இதில், ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த 15 ஆண்டுகளாக ஆந்திரம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், ஒடிசா மாநிலத்துக்குச் சென்ற தனிப் படை போலீஸாா், அந்த மாநில காவல் துறையினரின் உதவியுடன் துப்புலவாடா பகுதியைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கிருஷ்ணகாந்தை (52) கைது செய்து, ஆண்டிபட்டி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

தேசிய திறனறி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

SCROLL FOR NEXT