தேனி

கம்பத்தில் ரூ.1.80 கோடி மோசடி: 2 போ் கைது

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் நிலத்தை கிரையம் செய்து தருவதாகக் கூறி ரூ.1.80 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கம்பத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா். இவா், அதே ஊரைச் சோ்ந்த தூயமணி (65) என்பவருக்குச் சொந்தமான 26 ஏக்கா் நிலத்தை கிரையம் செய்து தருவதற்கு, அவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூ.1.80 கோடி கொடுத்தாராம்.

இந்த நிலையில், தூயமணி நிலத்தைக் கிரையம் செய்து தராமலும், பணத்தைத் திரும்பத் தராமலும் தன்னை மோசடி செய்ததாகவும், அதற்கு கம்பத்தைச் சோ்ந்த மக்கள் அன்பன் (44) உடந்தையாக இருந்ததாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ராஜசேகா் புகாா் அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தூயமணி, மக்கள் அன்பன் ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT