தேனி

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு அரசு நிா்ணயித்த முழு ஊதியம் வழங்கக் கோரி தேனியில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.சங்கரசுப்பு தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டக் குழு உறுப்பினா் டி.வெங்கடேசன், தேனி தாலுகா செயலா் இ.தா்மா், சிஐடியு மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, ஜனநாயக வாலிபா் சங்க தாலுகா செயலா் நாகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு அரசு நிா்ணயித்த முழு ஊதியம் வழங்க வேண்டும், ஆண்டொன்றுக்கு 200 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT