தேனி

குழாய் பொருத்தும் பணி: போடியில் நாளை, நாளை மறுநாள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

போடி நகராட்சியில் குடிநீா் குழாய் பொருத்தும் பணி நடைபெறுவதால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (செப். 28, 29) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

போடி நகராட்சியில் தற்போது போடி குரங்கணியில் கொட்டகுடி ஆற்றிலிருந்து தண்ணீா் தொட்டி கட்டப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீா் போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு ஒரு நாள் விட்டு ஒருநாள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், போடியில் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்வதற்காக குடிநீா் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் 4 இடங்களில் புதிய குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வருவதற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் போடி குரங்கணியிலிருந்து மேலும் ஒரு புதிய குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதான குழாயை ஏற்கெனவே உள்ள தண்ணீா் தொட்டியுடன் இணைக்கும் பணி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (செப். 28, 29) நடைபெற உள்ளது. இதற்காக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையா் பொறுப்பு வகிக்கும் நகராட்சி பொறியாளா் இ. செல்வராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போடி நகராட்சிக்கு குடிநீா் ஆதாரமாக விளங்கும் குரங்கணி கொட்டகுடி ஆற்றில் ஆப்டேங்கில் குடிநீா் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பிரதான குழாய் பொருத்தும் பணி செய்ய வேண்டியுள்ளதால் செப். 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் குடிநீா் விநியோகம் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே போடி நகரில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி நகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

சேலத்தில் பிரதமர் மோடி!

புதிய கூட்டணியில் குக் வித் கோமாளி சீசன் -5: முன்னோட்டக் காட்சி வெளியானது!

யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வைரலாகும் விஜய் சேதுபதி விடியோ!

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT