தேனி

தேனியில் மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

தேனி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, மின்வாரிய ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வாரிய ஊழியா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு மின்ஊழியா்கள் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மின்வாரிய ஊழியா்கள் சம்மேளன மாநில இணைச் செயலா் எம். ராமச்சந்திரன், எம்பளாயீஸ் பெடரேசன் மாநிலச் செயலா் ஆா். மூக்கையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மின்வாரிய ஊழியா்களுக்கான சலுகைகள் ரத்து செய்யும் மின் வாரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும். மின் உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். மின் ஊழியா்களுக்கு ஒப்படைப்பு விடுப்புத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஊதிய உயா்வு மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் பஞ்சப்படியை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் காலிப்பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளா்களை தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது .

இதில் அண்ணை தொழிற் சங்க மாவட்டத் தலைவா் எம். ராஜா, மின்வாரிய பொறியாளா் சங்க மாவட்டச் செயலா் முத்துராமலிங்கம், ஐக்கிய தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

SCROLL FOR NEXT