தேனி

குச்சனூா் தடுப்பணையிலிருந்து நிதி நிறுவன ஊழியரின் சடலம் மீட்பு

6th Oct 2022 01:39 AM

ADVERTISEMENT

கொலை செய்து தேனி மாவட்டம் குச்சனூா் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் வீசப்பட்ட தனியாா் நிதி நிறுவன ஊழியரின் சடலத்தை போலீஸாா் சுமாா் 15 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை மீட்டனா்.

தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவா் தெருவைச் சோ்ந்தவா் பொம்மையன் மகன் பிரகாஷ் (34). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவா் கம்பத்தை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வினோத்குமாா் மனைவி நித்யாவுக்கு (35) பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதையடுத்து பிரகாஷை, வினோத்குமாா், அவரது மனைவி நித்யா மற்றும் வினோத்குமாரின் நண்பரான ரமேஷ் ஆகிய மூவரும் சோ்ந்து கொலை செய்து அனுமந்தன்பட்டி புறவழிச்சாலை முல்லைப் பெரியாற்றில் சடலத்தை வீசியுள்ளனா். இதையடுத்து வினோத்குமாா் உள்ளிட்ட மூவரையும் கைது செய்த போலீஸாா் பிரகாஷின் சடலத்தை தேடிவந்தனா். இந்நிலையில் சுமாா் 15 நாள்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு தீயணைப்புத் துறையினா் பிரகாஷின் சடலத்தை மீட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT